கர்த்தர் இயேசு கல்வாரியில்
காயங்களால் நிறைந்தே
இரத்தம் சிந்தி ஜீவன் தந்த
காட்சியை கண்டிடாயோ
1. கோரமாம் உந்தன் பாவங்களை
பாரச் சிலுவைதனில்
ஏற்றவராய் தொங்கினாரே
உன்னையும் மீட்பதற்காய்
2. கரம் கால்கள் ஆணிக்கடாவப்பட்டார்
முள்முடி சூட்டப்பட்டார்
மானிடரின் சாபம் போக்க
மனுவேலன் பலியனாரே
3. விலாவதினில் ஈட்டி பாய்திடவே
இரத்தம் நீர் ஓடினதே
உந்தனுக்காய் இப்பாடுகள்
சொந்தமாய் ஏற்றுக் கொண்டார்
4. இயேசுவின் காயத் தழும்புகளால்
ஜீவன் சுகம் அடைவாய்
இரத்தம் வெள்ளம் பாய்ந்தாலே
சமாதானம் பெற்றிடுவாய்
5. சிலுவையண்டை நீ வந்திடுவாய்
நேசரை கண்டிடுவாய்
உன்னை என்றும் முற்றிலுமாய்
உவந்தவர் கழித்திடுவாய்
கர்த்தர் இயேசு கல்வாரியில் | Karthar yesu kalvariyil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment